ஒரு பிபிஇ கிட்டுக்கு ரூ.200 கமிஷன்: எடப்பாடி ஆட்சியின் மற்றொரு மெகா ஊழல் அம்பலம்!

Must read

சென்னை: ஒரு கொரோனா பாதுகாப்பு உடை கொள்முதலில் (பிபிஇ கிட்) ரூ.200 கமிஷன் அடித்துள்ளது கடந்த அதிமுக ஆட்சி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதுகாப்பு விஷயத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதாரத்துடன் பகீரங்கமாக  குற்றம் சாட்டியுள்ளார். ஒரு உடையில் ₹200 கமிஷ்ன் அடித்துள்ள இவர்களை சும்மாவிடலாமா?⁦⁦ என கொந்தளித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களுக்காக போராடி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதில் முந்தைய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு மெகா ஊழல் செய்துள்ளது.  சுகாதார ஊழியர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பிபிஇ கிட் எனப்படும் (“பர்சனல் புரொடெக்ட்டிவ்  கிட்”) அவசியம் கருதி, கொரோனா தொற்றுபரவிய ஆரம்பக் கட்ட காலத்தில் (2020) ஆண்டு இந்திய அரசு சார்பில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டது. மாநிலங்களுக்கு வழங்கங்பபட்டது. பின்னர் பிபிஇ கிட்களை தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் உள்நாட்டிலேயே தயாரித்து வழங்கி வருகின்றன.
ஆரம்பக்கட்டத்தில், இந்த  பிபிஇ உடைகளை, மத்தியச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தொழில்நுட்பக் குழு பரிந்துரைத்த சோதனையில், தகுதி பெற்ற பின்பே, பிபிஇ உடைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. நாளடைவில் இதை மாநில அரசுகளே கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பிறகுதான் தமிழகத்தில் கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. முதன்முதலாக எடப்பாடி ஆட்சியில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம்
ரூ1.45கோடியில், 25 இலட்சம் பிபிஇ கிட்கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். அதன்படி ஒரு  பிபிஇ கிட் விலை ரூ290 என தெரிவிக்கப்பட்டிருந்தது.  50,000 கிட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஒருமுறை ஆந்திர மாநிலம் தெனாலியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒரு பிபிஇ கிட்  விலை ரூ239/- என ரூ47.80 இலட்சத்துக்கு  20 ஆயிரம் கிட்கள் வாங்கப்பட்டுஉள்ளன.  பின்னர்  பேரூராட்சிகளில் 8000 பிபிஇ கிட் (கிளவுஸ், பிபிஇ கிட். முக்ககவசம், சானிடைசனர்) கொள்முதல்  ரூ1.20கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து  தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலம் கடந்த  21.4.2020ல் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள அனிதா டெக்ஸ் காட் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனத்திடம் PPE கிட், ஒரு கிட் ரூ385 விலையில் 10 இலட்சம் கிட் ரூ38.50கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிட் திருப்பூரில் 10 இலட்சம் பிபிஇ கிட் ஒன்றின் விலை ரூ385க்கு கொள்முதல் செய்யாமல், ஆந்திரா தெனாலியில் உள்ள Satya Sai dispo needs நிறுவனத்தில் ஒரு கிட் ரூ239க்கு கொள்முதல் செய்திருந்தால் 10 இலட்சம் கிட்டுக்கு ரூ15கோடி அரசுக்கு மீதமாகுமே ஏன் கொள்முதல் செய்யவில்லை என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
பின்னர் அதே திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள அனிதா டெக்ஸ் காட் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனத்திடம் இருற்நது ரூ.330 என்ற அளவில் பிபிஇ கிட் வாங்கப்பட்டு உள்ளது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  தமிழகஅரசு, கொள்முதல் விலைகளில் அதிரடியாக மாற்றம் செய்து வருகிறது. ஏற்கனவே நியாய விலைக்கடைகளுக்கு பருப்பு உள்பட பொருட்கள் வாங்கியதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது அம்பலமானது. இதை அனைவரும் அறிவோம். தற்போது, உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதுகாப்பு உபகரணங்களிலும் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
தற்போது திமுக  ஆட்சியில் அதே  திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள அனிதா டெக்ஸ் காட் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனம், பிபிஇ கிட்  விலை ₹130 என விற்பனை செய்ய முன் வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்  ஒருஉடையில் இருந் ரூ.330 என்ற அளவில் பிபிஇ கிட் வாங்கப்பட்ட நிலையில்,. தற்போது ரூ.130க்கு விற்பனை செய்கிறது என்றால், மீதமுள்ள ரூ.200 எங்கே  போனது, யாருக்கு சென்றது, இதில் எத்தனைகோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்பட்டும் வரும் வேளையில், கடந்த  ஆட்சியாளர்களோ, அதிலும் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வந்துள்ளது இதுபோன்ற ஊழல் காரணமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதை மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் டிவிட் மூலம் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி உள்ளார். அவரது டிவிட்டில்,
ஆட்சிமாற்றத்தின் அற்புதம் பாரீர்! கொரோனா முன்கள பணியாளருக்கான பாதுகாப்பு கவச உடை.. எடப்பாடியார் அரசுக்கு அனிதா டெக்ஸ்காட் கம்பெனி விற்ற விலை₹330 அதே நிறுவனம் தளபதியார் அரசுக்கு விற்க முன்வரும் விலை ₹130 ஒருஉடையில் ₹200 கமிஷனா? இவர்களை சும்மாவிடலாமா?⁦⁦  என கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சமயத்தில், திருப்பூர் லட்சுமி நகரில் அனிதா டெக்ஸ்காட்  நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிறுவனம் மக்கள்நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளராக இருந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமானது என்றும், இவரது வீடு, உறவினர்கள் வீடு, பின்னலாடை மற்றும் நூல் ஏற்றுமதி நிறுவனம் உள்பட பல இடங்களில் 17-3.21-அன்று சோதனை நடத்திaது. ஆனால், இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்டது குறித்து ஏதும் தகவல் வெளியாகவில்லை. ஆனால், தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 25லட்சம் பிபிஇ கிட்  கொள்முதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பிபிஇ கிட்டுக்கு ரூ.200 கமிஷன் என்றால் 25லட்சம் பிபிஇ கிட் வாங்கியதில் எத்தனை கோடி கமிஷன் அடித்திருப்பார்கள்.. வாசகர்களே நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்…
கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களுக்காக போராடி வரும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு விஷயத்திலேயே இத்தனை கோடிகள் கொள்ளையடித்துள்ள எடப்பாடி அரசு இன்னும் எத்தனை கொள்முதலில் எத்தனை ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதோ….?
நன்றி: விலைப்பட்டியல் உதவி: பீட்டர் அல்போன்ஸ்

More articles

Latest article