சென்னை: தமிழகத்தில் மேலும் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,70,678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 291 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அங்கு 597 பேர் இன்று பாதிக்கப்பட்ட நிலையில், 2வது இடத்தில் 506 பேர் பாதிப்புடன் ஈரோடும், 3வது இடத்தில் 318 பேர் பாதிப்புடன் சேலமும், 294 பேர் பாதிப்புடன் திருப்பூர் 4வது இடத்திலும், 291 பேர் பாதிப்புடன் சென்னை 5து இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த பாதிப்பு 24,70,678 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  23,97,336 பேர் தொற்று பாதிப்பில இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மேலும் 98 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 32,388 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் 37 பேர் தனியார் மருத்துவமனையிலும், 61 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 291 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 5,32,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 4 பேர் மட்டுமே உயரிழந்துள்ளனர். இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 8165 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இன்று மட்டும் 363 பேர் தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 52,03,79 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில்,3462 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் (28.06.2021) இன்று 10,478 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மாவட்டம் வாரியாக பாதிப்பு:

அரியலூர் 68
செங்கல்பட்டு 238
சென்னை 291
கோவை 597
கடலூர் 104
தர்மபுரி 110
திண்டுக்கல் 43
ஈரோடு 506
கள்ளக்குறிச்சி 116
காஞ்சிபுரம் 85
கன்னியாகுமரி 89
கரூர் 41
கிருஷ்ணகிரி 107
மதுரை 78
நாகப்பட்டினம் 64
நமக்கல் 184
நீலகிரி 87
பெரம்பலூர் 18
புதுக்கோட்டை 74
ராமநாதபுரம் 19
ராணிப்பேட்டை 76
சேலம் 318
சிவகங்கை 65
தென்காசி 40
தஞ்சாவூர் 231
தேனி 53
திருப்பதூர் 31
திருவள்ளூர் 118
திருவண்ணாமலை 137
திருவாரூர் 56
தூத்துக்குடி 63
திருநெல்வேலி 41
திருப்பூர் 294
திருச்சி 185
வேலூர் 51
விழுப்புரம் 67
விருதுநகர் 59