ரூ.15 ஆயிரம்: வாங்க… திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் போகலாம்!

Must read

திருமலை: 
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஆந்திர அரசு  ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது.
Tirupati-Balaji-hindu
திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக  ரெயில், பஸ் மூலம்  அழைத்து சென்று ஏழுமலையானை தரிசிக்க ஆந்திர மாநில சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இப்போது ஹெலிகாப்டரில் பக்தர்களை திருப்பதி கோவிலுக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. இதை அறநிலையத்துறை யுடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்து கிறது.
ஹெலிகாப்டர் பயணம் தொடர்பாக புதுடெல்லியை சேர்ந்த  நிறுவனத்துடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்து இருக்கிறது.
முதலாவதாக ஆந்திராவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. பின்னர் படிப்படியாக முக்கியமான இடங்களில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
விஜயவாடாவில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ஹெலிகாப்டர் ஸ்ரீசைலம் செல்லும். அங்கிருந்து கார் மூலம் கோவிலுக்கு அழைத்து சென்று வி.ஐ.பி. தரிசனம் வழங்கப்படும். அங்கிருந்து  இழுவை ரெயில் மூலம்  அழைத்து சென்று பாதா கங்கையில் படகு சவாரி செய்ய வைக்கின்றனர். பின்னர் மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீசைலத்தில் ஹெலிகாப்டர் புறப்பட்டு 1.30 மணிக்கு திருப்பதி சென்று அடைகிறது.
heli-1
அங்கு கார் மூலம் திருச்சானூர், சீனிவாச மங்களபுரம், ஸ்ரீகாளகஸ்தி கோவில்களில் தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட்டதும் பக்தர்கள் பின்னர் திருமலைக்கு அழைத்து சென்று இரவு தங்க வைக்கப்படுகிறார்கள்.
மறுநாள் காலை வி.ஜி.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய அழைத்து செல்லப்படுகிறார்கள்.
பின்னர் காலை 7.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 8.30 மணிக்கு விஜயவாடா சென்று அடைகிறது. இந்த சுற்றுலா திட்டத்தில் விஜயவாடா-ஸ்ரீசைலம்-திருமலை, ஐதராபாத்-ஸ்ரீசைலம்-திருமலை என்று 2 சுற்றுலா திட்டங்கள் உள்ளன.
ஒரு ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்யலாம். ஒரு நபருக்கு ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வெள்ளோட்டம் 2 நாளில் நடைபெற இருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article