கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் பாம்பு விஷம் பதுக்கி வைத்திருந்தவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சேமித்து வைக்கப்பட்டிருந்த பாம்புகளின் விஷம் கைப்பற்றப்பட்டது.

மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு தினஜ்பூர் பகுதியில் ஒருவர் பாம்புகளை வேட்டையாடி விஷம் சேமித்து வருவதாக வந்த தகவலை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரை சேர்ந்தவர்கள் அவரை பொறி வைத்து கைது செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்புடைய பாம்புகளின் விஷம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீசாரர் விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில்  இந்த விஷங்கள் மருந்து தயாரிக்க வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்துள்ளது.