சி.பி.எஸ்.இ.+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதில் சிக்கல்?

Must read

டில்லி,

சிபிஎஸ்சி பிளஸ்2  தேர்வு முடிவுகள் இன்று வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. டில்லி நீதி மன்ற உத்தரவு காரணமாக தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாகலாம் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 11 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதிய சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவ மாணவியர்கள் கீழே உள்ள இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். www.cbse.nic.in, www.cbseresults.nic.in

மேலும், கூகுள் ப்ளேஸ்டோரில் சிபிஎஸ்இ ரிசல்ட்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை சுமார் 11 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் சிபிஎஸ்சி-ல் பாடப்பிரிவில் கருணை மார்க் வழங்கும் முடிவு ரத்தானதாக கடந்த மாதம் சிபிஎஸ்இ அறிவித்தது. இதை எதிர்த்து டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நீதி மன்றம் கருணை மார்க் வழங்க வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக இன்று தேர்வு வெளியாவது சந்தேகம் என தெரிகிறது.

இதற்கிடையில், டில்லி நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து சிபிஎஸ்இ இயக்குனர் சதுர்வேதி இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசுகிறார்.

 

More articles

Latest article