சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000கோடி ஸ்வாகா நடைபெற்றுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழலை, அதிமுகவின் முன்னாள் ஐடிவிங் தலைவரான அஸ்பையர் சுவாமிநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.

சென்னை தி.நகரில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்குக்கு, அங்கு நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டமே காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியதுடன், இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கமிஷன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஊழலை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக ஐடி விங்-கின்  முன்னாள் தலைவராக இருந்த அஸ்பையர் சுவாமிநாதன் உறுதிப்படுத்தி டிவிட் பதிவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,  பாதாள சாக்டை திட்டத்தில் ரூ 5 ஆயிரம் கோடி ஸ்வாகா….. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000கோடி ஸ்வாகா… குடிமராமத்து பணிகளில் பல ஆயிரம் கோடி ஸ்வாகா.. அடப்பாவிகளா… 50 ஆண்டு அதிமுக வரலாறு, ஐந்தே ஆண்டில் ஸ்வாகா ….…. ஊரே சும்மா மெதக்குதுல்ல? என கூறியுள்ளார்.

அஸ்பையர் சுவாமிநாதனின் இந்த டிவிட் அதிமுக தலைமைகளிடையே பரபரப்பையும், பீதியையும் உருவாக்கி உள்ளது.

யார் இந்த அஸ்பையர் சுவாமிநாதன்

அதிமுகவின் ஐடிவிங் தலைவராக  மறைந்த ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் அஸ்பையர் சுவாமிநாதன். இவர்  பல ஆண்டுகாலம் அதிமுக வுக்காக பணியாற்றியவர். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததும், அதிமுக தலைமைமீது குற்றம் சாட்டிவிட்டு, கட்சியில் இருந்து விலகியவர்.

அப்போது, அதிமுகவில் திறமைக்கும், தொழில்முறைக்கும் மதிப்பில்லை என குற்றம் சுமத்தினார்.

பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து, நம் முன்னே பல மகிழ்ச்சியூட்டும் தருணங்கள் நிறைந்திருப்பதாக தெரிகிறது.  கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள்…. ஆதாரங்களுடன் அனைத்தர்கும் அதிர வைக்கும் விடைகள்….. Game Over Bro….

கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை, விலகாத மர்மங்கள் வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்…விரைவில்…… என்றும் அதிமுக ஜாதி கட்சியாக மாறி வருகிறது என்றும் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இது ஒருபுறம் இருக்க அவர்மீது, கட்சியினருக்கு பதவி வாங்கி தருவாக காசு வாங்கியது மற்றும், கட்சி பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது,  அம்மாவின் வாரிசு என்று கூறியது, ஜெ.விடம் கூறி பதவியை விட்டு தூக்கி எறிவேன் என மிரட்டியது என பல புகார்களும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.