சென்னை: அங்கன்வாடி மையங்களில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில்  25% இட ஒதுக்கீடு செய்து  தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறிய ஏராளமான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தற்போது விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 2 வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 25% இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக அங்கன்வாடி பணியாளர் நேரடி நியமன விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

தமிழகஅரசின் இந்த அதிரடி உத்தரவு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.