சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடத்தல் மன்னன் இக்பால் பாஷா  என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.  போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை என்ற பெயரில் போதைப்பொருட்களை காவல்துறை வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையில். ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த போதைப் பொருட்களை  எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வந்த கடத்தல் மன்னன் இக்பால் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  அத்துடன் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் திருச்சி சிறையில் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது என்ஐஏ அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து 60க்கும் மேற்பட்ட செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சசியாக தற்போது ரூ.100 மதிப்பிலான போதைப்பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

போதைபொருள் விவகாரம்: சென்னை கேளம்பாக்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

சென்னையில் போதை பொருள் விற்பனை – கடத்தல் சம்பந்தமாக கடந்த இரு மாதத்தில் மட்டும் 189 பேர் கைது!

இந்தியாவின் போதைபொருள் கடத்தல் கேந்திரமாக மாறிய அதானியின் குஜராத் துறைமுகம்! ரூ.376.5 கோடி மதிப்புள்ள  75 கிலோ ஹெராயின் பறிமுதல்