சென்னை:
முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோயை கட்டுப்படுத்த ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் தேமுதிகவின் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கியுள்ளோம். அதே போல் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுமாரு ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன். மேலும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன். இந்நிலையில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் 10 லட்சம் ரூபாயை வழங்க இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.