13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

Must read

சென்னை:
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் தலைமை செயலர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக ஆனந்த்குமாரும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக ஜெயசீலனும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக குமரகுருபரனும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக நீரஜ் மிட்டலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியல்மேலும் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர மேலும் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article