சென்னை

மிழகத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட உணவகங்களுக்கு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த சோதனைகள் மற்றும் அதன் முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில்

“கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் அளவிலான குடகா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளன 15,236 உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1,572 உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.