அகமதாபாத்,

யிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் கேம் விளையாடுபவர்கள், அந்த விளையாட்டின் அட்மின்  குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு வழங்குவதாக குஜராத் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் புளுவேன் ஆன்லைன் விளையாட்டில் உள்ள டாஸ்க் காரமாக  உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவிலும், புளுவேல் விளையாட்டு காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

உயிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் கேம், அந்த விளையாட்டின் அட்மின் வாயிலாக டாஸ்க் கொடுக்கப்பட்டு, இறுதியில், கையில் திமிங்கலம் படம் வரைந்துகொண்டு, தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த உயிர்க்கொல்லி விளையாட்டுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. மேலும்,  விளையாட்டில் ஈடுபடுபவர்கள்  குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

உயிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் விளையாட்டை  கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் நடத்தும் அட்மின் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய  மாநில உள்துறை அமைச்சர் பிரதிப்சின் ஜடேஜா, அரசின் இந்த உத்தரவை உறுதி  செய்யும் படி அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் எஸ்பிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கேமின் மோசமான விளைவுகள் குறித்து அறிந்து கொள்ள இலவச போன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும்,  மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  புளுவேல் கேம் நடத்தும் அட்மின் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்,  அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.