கோவை: கேரளாவில் ரூ.2000 நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக கோவையில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ளக்நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கள்ளநோட்டு நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில்  பிரியன்லால் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் 95,000 ரூபாய் கள்ள நோட்டுகளுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ள நோட்டுக்கள் கோவையில் இருந்து புழக்கத்தில்விடப்பட்டு வருவது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து, கேரள மாநில போலீசார் மற்றும் தமிழக போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் பகுதியில் இஸ்லாமியர்கள் வசிக்கும் அல் அமீன் காலனியில் உள்ள அஸ்ரப் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு 8000 ரூபாய்  கள்ளநோட்டுக்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து,  கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள சைய்யது சுல்தான் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் ஏராளமான கள்ள நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்து சுல்தானையும் கைது செய்தனர். சுல்தான் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டு ரூ. 1.80 கோடி மதிப்பிலானது  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

அஸ்ரப்,  சைய்யது சுல்த்தான்,  ஆகிய  இருவரையும் கொச்சியில் இருந்து வந்த கேரள போலீசார் கைது, கோவை குனியமுத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்று முதல் கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பதும், கேரளாவை தலைமையிடமாக கொண்டு கள்ள நோட்டு கும்பல் செயல்பட்டு வந்து இருப்பதும் தெரியவந்தது. கோவை கரும்புகடை, அல் அமீன் காலனி பகுதிகளிலும் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு இருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைதான இருவரையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தையும் எடுத்துக்கொண்டு மேல்  விசாரணைக்காக அவர்களை கொச்சி அழைத்து சென்றனர்.