ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள இந்த படம் இம்மாதம் 7 ம் தேதி ரிலீசுக்கு தயாரானது.

தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாக இருந்தது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், திரையரங்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், ரசிகர்கள், விநியோகிஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி 7 ம் தேதி ஆர்.ஆர்.ஆர். ரிலீசாகாது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.