ரவுடி பினுவுடன் ரவுடி முகேஷ் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)

சென்னை:

சென்னை பூந்தமல்லி அருகே  பிறந்த நாள் பார்ட்டியின்போது, தப்பியோடி கைதி பினு மற்றும் அவரின் முக்கிய கூட்டடாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ரவுடி பினுவின் முக்கிய கூட்டாளியான முகேஷ் என்பவர் பட்டுக்கோட்டையில் போலீசாரால் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 7ந்தேதி நள்ளிரவு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மலையம்பாக்கம் லாரி ஷெட்டில் சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான பினுவின் பிறந்தநாள் கோலாகலமாக நூற்றுக்கணக்கான ரவுடிகள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் விழாவில் ரவுடி பினு, அரிவாளால் கேட் வெட்டியும், ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டும் ஆட்டம் பாட்டம் கொண்டாடங்களுடன் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ரவுடிகளை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதில் மார் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் பிடிபட்டனர். இருந்தாலும் 50க்கும் மேற்பட்டோர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.   தப்பி ஓடிய கைதிகளை சுட்டுப்பிடிக்க போலீசாருக்கு மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து ரவுடி பினு உள்பட தப்பிய கைதிகளை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலை யில்,  பிரபல ரவுடி பினுவின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான சென்னை சூளைமேட்டை சேர்ந்த முகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரவுடி முகேஷ் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள  ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக சென்னை ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியை த கண்காணித்த போலீசார்,  அங்குள்ள சுண்ணாம்புகாரத்தெருவில் பதுங்கி இருந்த ரவுடி முகேஷை  சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில்  கைது செய்தனர்.

‘மேலும் ரவுடி முகேசுக்கு தங்க இடம் கொடுத்த, சென்னை சட்டக்கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பு  படித்து வரும் பட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்துள்ளது.

ரவுடி முகேஷ் கைது தொடர்பாக, தமிழ்ச்செல்வனின் தம்பி விஜய்யும்  கைது செய்யப்பட்டார். அவர்களை போலீசார் சென்னை அழைத்து வந்துள்ளனர்.

ரவுடி முகேஷ் கைது சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. முகேஷ் மீது ஏற்கனவே  செம்மரக்கட்டை கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள ரவிடி பினுவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.