டெல்லி:

மிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்றும் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின்போது, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு,  விண்வெளித்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்தார்.

அப்போது, தற்போது ராக்கெட் ஏவுதளம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில்  உள்ளது என்றும், மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

குலசேகரன்பட்டினம் ஏற்கனவே தசரா பண்டிகைக்கு பெயர்போன பகுதி. இங்குள்ள ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரபலமானது. தற்போது, இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது, அந்த மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.