சென்னை:

காக்கா முட்டை திரைப்படத்தை பார்த்து, அதுபோலவே, ரயில் பயணியின் கையில் இருந்து மொபைல் போனை பறித்துள்ளனர் சிறுவர்கள். இந்த சம்பவத்தின்போது ரயிலில் இருந்து கீழே விழுந்த வாலிபரின் கால்கள் துண்டானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திரைப்படங்கள், குறும்படங்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக திரையுலகை சேர்ந்தவர்கள் கூறி வந்தாலும், எங்கோ நடைபெறும் ஒரு சிறு தவறை வெளிச்சம்போட்டு காட்டி, இப்படியெல்லாம் செய்ய முடியும் என்பதை அனைத்து தரப்பினர் மத்தியில் பரவ செய்து சமூக சீர்கேடுகளை ஊக்குவிப்பதில், திரையுலகம்தான் முன்னணியில் இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில்,  ரயிலில் படிக்கட்டு அருகே நின்றுக்கொண்டு சென்ற பயணியிடம், தண்டவாளத் தில் இருந்த சிறுவர்கள் கட்டையால் அடித்து அவரிடமிருந்த செல்போனை பறிக்க முயன்ற போது, கீழே விழுந்த பயணியின் கால் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற காட்சிகள், காக்கா முட்டை என்ற படத்தில், எடுக்கப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது. அதுபோலவே தற்போது,  ரயிலில் படிக்கட்டு அருகே நின்றுக்கொண்டு மொபைல் பேசி வந்த  சென்ற பயணியிடம், தண்டவாளத்தில் இருந்த சிறுவர்கள் கட்டையால் அவரது கையில் அடித்து,  அவரிடமிருந்த செல்போனை பறிக்க முயன்ற போது, கீழே விழுந்த பயணியின் கால் துண்டானது. இந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடுமையான சம்பவம் சென்னையில் ரயிலில் நடைபெற்றுள்ளது.  படிக்கட்டு அருகே நின்றபடி செல்போனில் பேசியபோது, அண்ணாமலை நகர் ரயில்வே கேட் அருகே சிக்னலுக்காக ரயில் மெதுவாக சென்ற வெளையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த தாக்குதலில் கீழே விழுந்த அந்த வாலிபரின் கால் துண்டானது.

அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து, அவரை தாக்கிய 3  சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த வருடம் சென்னை சென்ட்ரல் – திருவொற்றியூர் நிலையங்களுக்கு இடையே,  படிக்கட்டுகளில் நின்றவாறு செல்போனில் பேசியபடி செல்பவர்களை கீழே இருந்து செல்போனை கம்பால் தட்டி விட்டு, அதனை ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தது. அப்போது சிலரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.