சென்னை:

மாற்று வேட்பாளர்கள் மற்றும் சில சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு நடப்பது உறுதியாகிவிட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், வாபஸ் பெற காலக்கெடு இன்று மதியம் 3 மணியுடன் முடிந்தது.

மொத்தம் 82 பேர் வேட்புமனு தாக்கல் செய்தியிருந்ததில், மாற்று வேட்பாளர்கள் 8 பேர், சுயேட்சை வேட்பாளர்கள் 12 பேர் என இருபது பேர் வாபஸ் பெற்றனர். ஆகவே 62 பேர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

ஒரு வாக்கப்பதிவு எந்திரத்தில் 16 சின்னங்களை வைக்க முடியும். ஒரு யூனிட்டில் நான்கு வாக்குப்பதிவு  எந்திரங்களை இணைக்கலாம். ஆகவே 64 சின்னங்களை வைக்கலாம். இதில் நோட்டா சின்னம் தவிர 63 சின்னங்கள் வைக்கலாம். ஆகவே 63 பேருக்கு மேல் போட்டியிட்டால் மின்னணு எந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

ஆனால் தற்போது களத்தில் 62 வேட்பாளர்கள் மட்டுமே இருப்பதால், ஆர்.கே.நகர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு நடப்பது உறுதியாகி உள்ளது.

82 பேர் வேட்பு மனு 62 பேர்.. சுயேட்சை 8 மாற்று வேட்பாளர் 12 பேர்