ஆர்.கே.நகர் தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

மதிமாறன்

சென்னை:

ப்ரல் 12ம் தேதி நடக்க இருக்கும் சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிப்போகும் தே.மு.தி.க. வேட்பாளரை அக் கட்சி தலைமை அறிவித்தது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அவர் வென்றி ஆர்.கே. நகர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 12ம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆளுங்கட்சியான அதிமுகவின் சசிகலா அணி சார்பாக அக் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான தி.மு.க.வும் விருப்பமனுக்களை பெறுவதில் தீவிரமாக இருக்கிறது.

இந்த நிலையில் தே.மு.தி.க. தனித்துப்போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.   தேமுதிகவின் வட சென்னை மாவட்ட செயலளார் மதிமாறன் போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


English Summary
Rk nagar dmkd r Candidate Announced