சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது.

போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை அக்கட்சி பெற்று வருகிறது. இந்நிலையில் திமுக.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆர்.கே.நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இந்த தகவலை இன்று அறிவித்தார்.