ஐஸ்ர்யா, ஐ.நா. ஆட்டம்: வாய்ப்பு கிடைத்தது இப்படித்தானாம்!

Must read

 

“ஐ.நா. சபையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரவரின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், ரஜினி மகள் ஐஸ்வர்யா, பரதம் என்ற பெயரில் ஏதோ ஆட்டம் போட்டு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தின். ஏன், இந்தியாவின் மானத்தையே வாங்கிவிட்டார்” என்று குமுறுகிறார்கள் பரதக் கலைஞர்கள்.

மேலும், “உலகமே கவனிக்கக்கூடிய நிகழ்ச்சி அது. அங்கு ஐஸ்வர்யாவின் ஆட்டத்தை பார்த்தவர்கள், “அய்யய்யோ.. இதுதான் பரதநாட்டியமா” என்று நினைத்திருப்பார்கள். இதனால் பரதக்கலையின் மரியாதையையும் கெடுத்துவிட்டார் ஐஸ்வர்யா” என்கிறார்கள்.

தவிர, “நடனமே தெரியாத ஐஸ்வர்யாவுக்கு முறைகேடாக வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்” என்று சில தகவல்களைச் சொல்கிறார்கள்:

“ஐ.சி. சி.ஆர். என்ற மத்திய அரசு துறைதான் இதற்குக் காரணம். இது  இந்தியன் கல்சுரல் சொசைட்டி. இந்தத் துறை அதிகாரிகள்தான்,  தகுதியான கலைஞர்களை தேர்ந்தெடுத்து  ஐ.நாவுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இவர்கள் தகுதியை புறந்தள்ளி, தங்களுக்கு தேவையானதைப் பெற்றுக்கொண்டு ஐஸ்வர்யா போன்ற தகுதியற்றவர்களை அனுப்புகிறார்கள். இவர்களுக்கு இடைத்தரகர்களாக இருப்பவர் வைரமான பாடலாசிரியர்தான்.   இந்தத் துறை அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டுதான் அவர்,  பல முறை தேசிய விருதுகளை வாங்கினார். அந்த பழக்கத்தில்தான் ஐஸ்வர்யாவுக்கும் ஐ.நா. வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்தார்” என்று குமுறுகிறார்கள் பரதக்கலைஞர்கள் பலர்.

தகுதியான ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் நல்ல கலைஞருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும்.. பரதத்தின் பெருமை மட்டுமல்ல.. பாரதத்தின் பெருமையும் உயர்ந்திருக்கும்!

More articles

Latest article