ஆர்.கே.நகர் தொகுதி: தேர்தல் அலுவலராக பத்மஜாதேவி நியமனம்!

Must read

சென்னை,

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.

அந்த தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்கள் வந்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில்  இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ந்தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில்,  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் பத்மஜா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்  துணை தேர்தல் அலுவலர்களாக மதன்பிரபு, என்.சி.போஸ் ஆகியோரை  நியமனம் செய்தும் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

More articles

Latest article