வரும் 22ந்தேதி வெளியாகிறது ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’

Must read

ஆர்ஜே.பாலாஜி நடித்துள்ள அரசியல் கலந்த காமெடி படமான  ‘எல்.கே.ஜி. படம் வரும் 22ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள அரசியல் படமான ‘எல்கேஜி’ என்ற படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபு என்பவர் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் முழுநேர அரசியல்வாதியாக காமெடி கலந்த வேடத்தில் பாலாஜி நடித்து வரு கிறார். ஏற்கனவே வெளியான எல்கேஜி படத்தின் போஸ்டர்கள், டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் படம் பிப்ரவரி 22ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை  ஆர்.ஜே.பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article