புதுடெல்லி:
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட உலக கலச்சார திருவிழாவால் யமுனை ஆற்றுபடுகை முற்றிலுமாக அழிந்து விட்டதாக நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது
world-culture-festival_650x400_41457602550
 
இது குறித்து 47 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை நாட்டின் உயரிய பசுமை நீதிமன்றத்தில் தாக்கசெய்துள்ளது அதில் ” 7 ஏக்கரில் 3 நாட்கள் நடைபெற்ற இநநிகழ்ச்சியால் ஆற்றுப்படுகையின் நீர்வளம் அழிந்து, நிலம் சமன்படுத்தப்பட்டு விவசாயம் தகுதியற்ற இடமாக மாறிவிட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வால் அங்கு வாழும் உயிரினங்கள் இருக்க இடமின்றி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, புதர்களில் பயந்து வாழ்வதாக. கூறியுள்ளது. இது ஈடுசெய்யமுடியாத பல்லுயிர் இழப்பு என்பதும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய 7பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்தது. கடந்த மார்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 5 கோடி ரூபாய் பிணையுடன் அனுமதி வழங்கப்பட்டது.
பசுமை தீர்பாயத்தின் ஆணைகிணங்க ஆய்வு மேற்கொண்ட குழு, நிகழ்ச்சிக்காக போடப்பட்ட சாலைகளினாலும், அமைக்கப்பட்ட மேடைகளினாலும் பெரும்பகுதி மண் வளமும் இயற்கை வளமும் நீர்வளமும் அழிக்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்தது. இது குறித்து கருத்து கூறிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ” அந்த இடம் முன்பைவிட சீர்ப்பட்டு இருக்கிறது” என கூறினார். கடந்த மார்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது