shakshi2ரியோ ஒலிம்பிக் 58 கிலோ எடை பிரிவிலான பெண்கள் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற  இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தன்னுடன் மோதிய மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் -ஐ  12-3 என்ற புள்ளிக்கணக்கில்  தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.
sakshi
இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.
வெண்கலம் வென்ற  இந்திய வீராஙக்னை  சாக்ஷி மாலிக்கிற்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
ஒலிம்பிக் பெற்ற  வெற்றிக்காக சாக்ஷிக்கு  அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு அறிவித்து உள்ளது.   மத்திய அரசும்  ரூ.30 லட்சம் பரிசு அளித்து சாக்ஷியை கவுரவப்படுத்தி உள்ளது.

சாக்ஷியின் பெற்றோர் டிவியில் பார்த்தபோது
சாக்ஷியின் பெற்றோர் போட்டியை  டிவியில் பார்த்தபோது