இந்த சிஎஸ்ஆர் நிதிமூலம் தனியார் தொழில் நிறுவனங்கள், தங்களால் முடிந்த அளவிலான உதவிகளை செய்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு நாடு முழுவததும் கொரோனா பரவத் தொடங்கியயதும், சிஎஸ்ஆர் நிதியை பிரதமர் ஆரம்பித்துள்ள ‘பி.எம்.கேர்ஸ்’ என்ற கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதியை பி.எம்.கேர்ஸ் நிதியில் செலுத்தி வருகின்றன. இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன், சிஎஸ்ஆர் நிதிகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ள மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் (Rao Inderjit Singh), தமிழக சிஎஸ்ஆர் நிதியில், சிறு தொகை கங்கை நதி சுத்தப்படுத்த உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
தமிழகத்திற்கு உரிய சிஎஸ்ஆர் நிதி, தமிழ்க வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், வடமாநிலங்களில் பாயும் கங்கா நதியை சுத்தப்படுத்த பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள திமுக எம்.பி. வழக்கறிஞர் வில்சன்,
தமிழகத்தில் கார்பொரேட் சமூக பொறுப்பு நிதி(CSR) நிதி ஒதுக்கீடு குறித்த எனது கேள்விக்கு நிதியின் ஒரு பகுதி சுத்தமான கங்கை நிதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாக பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை