மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை சந்திக்கச் சென்று திரும்பிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “ஜெயலலிதா நலமுடன் உள்ளார்.  அவருக்கு சிகிச்சை அளித்துவரும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவிடம் பேசினோம். அவரிடம், நாங்கள் மனதளவிலே நெகிழ்ந்து போய் இருக்கிறோம். இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து இருக்கிறீர்கள்., உங்களைப் போன்ற உயர்ந்த மருத்துவர்களுடைய சிகிச்சையினால், எங்கள் முதல்வர், நலமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.  நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றேன்.

முதலமைச்சரின் சிகிச்சை முறை குறித்து என்னிடம் விளக்கிய அவர், அவருடைய விசிட்டிங் கார்டைகூட என்னிடம் கொடுத்தார்” என்று வைகோ தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவுக்கு அப்போல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். ரிச்சர்டும் விளக்கம் அளித்தார்.

அப்போது ஒரு செய்தியாளர், “வைகோ உங்களை சந்தித்தாரா? அவருக்கு நீங்கள் விசிட்டிங் கார்டு கொடுத்தீர்களா?” என்று கேட்டார்.

இதையடுத்து அங்கு சிரிப்பலை பரவியயது. ரிச்சர்டும் சிரித்தார். பிறகு, “அப்போது பலரும் என்னை சந்தித்தார்கள். வைகோவும் சந்தித்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டார். நான் விளகக்கினேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். நான் என்னுடை விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்தேன்” என்று ரிச்சர்ட் தெரிவித்தார்.