பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

“தனுசு ராசி நேயர்களே” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பிரபல இயக்குநர் சந்தான பாரதியின் மகனும், இயக்குனருமான சஞ்சய் பாரதி இயக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோட்டி நடிக்கவிருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக 2018-ல் ‘ஜலேபி’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது.