சென்னை:
திவுத் துறை மூலம் ரூ.12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஆளவுக்கு நடப்பாண்டில் ரூ. 12,700 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் அனைத்தும் இணைய வழி மூலமாக செலுத்து நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பத்திர பதிவு மேற்கொள்ளும் போது சார்பதிவாளர் அலுவலத்தில் எந்த அலுவலர்களுக்கோ அல்லது இடைத்த்ரகர்க்ளுக்கோ கையூட்டு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் கையூட்டு கேட்டும் அலுவலர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என்றும் கேட்டு கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.