கோவை: கோவையில் கைது செய்யப்பட்டுள்ள   கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை சிறையில் அடைக்கப்படுார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த கர்ணன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது தலைமை நீதிபதி உட்பட 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதனால் அவர் கொல்கொத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு ஊழல் பட்டியலை அனுப்பி வைத்தார். இதனால் கர்ணன் மீது உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேலும் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில்   கர்ணனை கைது செய்ய மேற்கு வங்க போலீசாருக்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்  நீதிபதி கர்ணன் தலைமறைவானார். அவரை கைது செய்ய மேற்கு வங்க டி.ஜி.பி., மற்றும் கூடுதல் டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், சென்னை உள்ளிட்டபல்வேறு ஊர்களில் தேடி வந்தனர். இதற்கிடையே  கடந்த 12ம் தேதி அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள மலுச்சம்பட்டி அருகே தங்கியிருந்த போது கர்ணன் கைது  மேற்குவங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த கர்ணனை காவல்துறைியனர் பிடித்தனர்.

கோவையில் இருந்து விமானம் மூலம் நீதிபதி கர்ணன் சென்னை கொண்டுவரப்படுகிறார். சென்னையில் இருந்து அவரை கொல்கத்தா அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நாளை மதியத்துக்குள் கொல்கத்தா அழைத்துச் செல்லப்படும் கர்ணன், அங்கு கோர்டில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் பிறகு சிறையில் அடைக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.