சென்னை:
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை போல மக்கள் பணியாற்ற விரும்புவதாக கூறி இன்று விருப்ப ஓய்வு கடிதம் அளித்த தமிழக பணி நிலைப்பிரிவு குடிமைப்பணி அலுவலர் ஜக்மோகன் சிங் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு உள்ளுறை ஆணையர் பதவியில் ஜக்மோகன் சிங் ராஜூ ஐஏஎஸ் பதவி வகித்து வந்தார். அவர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணி செய்து வந்தார். இவர் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இந்த பணியில் இருந்து வந்தார். இந்தச் சூழலில் கடந்த 25ஆம் தேதி இவர் தன்னுடைய பதவியிலிருந்து விருப்பு ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார். அத்துடன் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடித்தத்தில், 2023ஆம் ஆண்டு என்னுடைய பணி காலத்திற்கு பிறகு பஞ்சாப் செல்வதா அல்லது தற்போதே ராஜினாமா செய்துவிட்டு அங்கு செல்வதா என்ற குழப்பம் எனக்குள் இருந்து வந்தது. ஆனால் நீங்கள் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழ் மக்களுக்காக மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்காக செய்யும் செயல்கள் எனக்கு மிகவும் பிடித்தது. மேலும் உங்களுடைய செயல் எனக்குள் இருந்த குழப்பத்தை தெளிவு படுத்த முக்கிய காரணமாக அமைந்தது. உங்களுடைய பாதையில் சொந்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், அவர் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்