சென்னை

மிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான போக்குவரத்து உச்சவரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தையொட்டி கடந்த வருடம் மார்ச் இறுதி முதல் விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.    அதன் பிறகு கொரோனா தாக்கம் குறைந்ததால் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்தது.  அதன் அடிப்படையில் மாநில அரசுகளும் சிறிது சிறிதாகப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து வருகிறது.

அவ்வகையில் தமிழக விமான நிலையங்களில் சென்னை விமான நிலையத்தில் 50 விமானங்கள் வரத் தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.  மேலும் மாநிலத்தில் ஒரு சில விமான நிலையங்களில் மட்டும் விமான போக்குவரத்துக்குத் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.   இந்த உச்சவரம்பை நீக்கி சென்னையில் உள்ளூர் விமானங்கள் 50க்கு பதில் 144 விமானங்கள் வர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அதையொட்டி தமிழக அரசு தற்போது மாநிலங்களுக்கிடையே 50 விமானங்கள் வர அனுமதி அளித்திருந்ததை ரத்து செய்து 100 விமானங்களாக அதிகரித்தது.  மேலும் தமிழகத்துக்குள் உள்ள சேலம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே 30 விமானங்கள் வரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையங்களில் தற்போது 50 விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.