சென்னை: நாளை காலை 10 மணி முதல் சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை இருவழித்தடமாக செயல்படும் எனறு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் பாரிமுனை பகுதியில் ரிசர்வ் வங்கி சுரங்க பாலத்தின் இரும்பு உத்திரங்களை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக கடந்தாண்டு செப்டம்பர் முதல் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்து, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

கட்டுமான பணிகள் முடியும் வரை ராயபுரம் பாலம், ராஜாஜி சாலையில் இருந்து, காமராஜர் சாலை வரை செல்லும் அனைத்து வாகனங்களும், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டு இருந்தனர்.

இந் நிலையில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்ததால், வாகனங்கள் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நாளை காலை 10 மணி முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இருவழித்தடமாக செயல்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.