டில்லி:

ஜூலை 1ந்தேதி முதல் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் கிடையாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

மோடி கடந்த ஆட்சியின்போத  அமல்படுத்திய பணமதிப்பிழப்பை தொடர்ந்து, அனைத்து விதமான பண பரிவர்த்தனைகள் பெரும்பாலும் இணைய வழி மூலமாகவே நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து வங்கிகளும் சேவைக்கட்டணம் வசூலித்து வருகிறது. அதுபோல என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் போன்ற  பரிவர்த்தனைக்கு 1 முதல் 5 ரூபாயும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கு 5 முதல் 50 ரூபாயும் வசூலித்து வருகிறது. இது பொது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து  ஜூலை 1 முதல் ஆன்லைன் பண பரிவர்ததனை சேஐகூஐ இலவச சேவையாக வழங்க அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.

என்.இ.எப்.டி. (NEFT) மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். (RTGS) பரிவர்த்தனைகள் மீதான கட்டணத்தை ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ளது.

(ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) என்பது பெரிய தொகைகளின் பரிவர்த்தனைக்கானது.  நேஷனல் எலெக்ட்ரானிக் பண்டு டிரான்ஸ்பர் (National Electronic Funds Transfer) என்பது 2 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தொகைகளின் பரிவர்த்தனைக் குரியது. )

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை ஊக்குவிக்கும் வகையில் “ஜூலை 1, 2019 முதல் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் (processing charges, time varying charges) என்.இ.எப்.டி. பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களும் (processing charges) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.” என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண ரத்து மூலம் கிடைக்கும் பலனை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கட்டண ரத்து அறிவிப்பால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் என்.இ.எப்.டி. மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளை பயன்படுத்துவதற்காக எந்தக் கட்டணத்தையும் ரிசர்வ் வங்கிக்குச் செலுத்த வேண்டாம். எனவே, வங்கிகளும் இந்த இரு வகையான பரிவர்த்தனை களுக்காக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்காது.

ரசு டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பணத்தை ரொக்கமாக பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளத் தூண்டும் வகையில் புதிய வரியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி  ஆண்டுக்கு ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.