சென்னை:

லகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகியது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு; ஆனால். அவரது இடத்தை  கே.எல்.ராகுல்  பூர்த்தி செய்வார் என்பதில் சந்தேகமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் கூறினார்.

கட்டடை விரல் காயம் காரணமாக இந்திய  கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு 3 வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள. ஷிகர் தவான் உலககோப்பை போட்டியில் இருந்து விலக்கப் பட்டிருப்பது குறித்து பல்வேறு தரப்பினர் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், தற்போது நடைபெற்று வரும்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி  வலிமையான  தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை  வீழ்த்தி தெம்புடன் உள்ளது. இதனால் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா மீது ரசிகர்களின் கவனம் அதிகமாக திரும்பியுள்ளது. கடந்த, ‘2003 ஆஸ்திரேலிய அணியை போல, தற்போதைய இந்திய அணி வலுவாக உள்ளது. இதனால், இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அனைத்து அணிகள் மீதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்’ என்றவர்,   “ஷிகர் தவான் காயம் காரணமாக போட்டிகளிலிருந்து விலகியது பெரிய இழப்பு என்றாலும், அவர் இடத்தை கே.எல்.ராகுல் பூர்த்தி செய்வார் என்றார்.  இந்தியா, இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்” எனவும் அஸ்வின் கூறியுள்ளார்.