கரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன.

இந்நிலையில் ‘பிளாக் விடோ’ நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என்றும், ‘முலான்’ ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என்றும் டிஸ்னி அறிவித்துள்ளது.

எடர்னல்ஸின் வெளியீடு பிப்ரவரி 12, 2021க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘ஷாங் சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்’ (மே 7, 2021), ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2’ (நவம்பர் 5,2021) மற்றும் ‘தார்: லவ் அண்ட் தண்டர்’ (பிப்ரவரி 18, 2022) ஆகிய படங்களின் வெளியீடுகளும் தள்ளிப்போயுள்ளன.

‘பிளாக் பேந்தர் 2’ மே 6, 2022 மற்றும் ‘கேப்டன் மார்வல் 2’ ஜூலை 8, 2022 என முன்னரே அறிவிக்கப்பட்டபடி வெளியாகும். இந்தத் தேதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.