தென் ஆப்பிரிக்காவில் வௌவ்வால்-களுக்கு நியோ-கோவ் என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது மேலும் ஒரு உருமாற்றம் அடைந்து மனிதர்களிடம் தொற்றும் போது இதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும்.

சார்ஸ் கோவ் போன்று இந்த வகை வைரசும் வேகமாக தொற்றக் கூடியது நியோ கோவ் தொற்று பாதித்த மூன்றில் ஒருவர் மரணமடைவார்கள் என்று வுஹான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சீன விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ள இந்த நியோ-கோவ் வகை கொரோனா வைரஸ் 2012 ம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்காவில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வௌவ்வால்கள் இடையே அதிகம் காணப்படும் இந்த நியோ-கோவ் கொரோனா வைரஸ் மெர்ஸ் போன்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது மட்டுமே இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இது மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

மேலும் ஒரு உருமாற்றம் பெரும்பட்சத்தில் இது மனிதர்களிடம் தொற்ற கூடிய வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

இருந்தபோதும், இந்த வகை வைரஸ் திடீரென தற்போது உருவாகி இருப்பது போல் கூறுவதும், இதனால் மூன்றில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதும் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று இந்திய மருத்துவ வல்லுநர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.