மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ரூ.85 லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு! அமைச்சர் சேகர்பாபு…

Must read

நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.85 லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு பிணிகள் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு, மனோதங்கராஜ் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள பிலபலமான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.  இதையடுத்து கோயிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் திருப்பணிகள் குறித்து அறிந்துகொள்ளும் விதமாக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சசர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் கலந்துகொண்டனர். பிரசன்னத்தின்போது,  அம்மனுக்கு கோபம் எதுவும் இல்லை, அம்மனைச் சுற்றியுள்ளவர்களால் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது என்றும்,அம்மன் புற்று வடிவில் சுயம்புவாக தோன்றியுள்ளார். அந்த விக்ரஹத்திலும் சிறிது சேதம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மனோதங்கராஜ்,  மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில்,  தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி இன்று நானும் மாண்புமிகு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் நேரில் சென்று ஆய்வு செய்தோம்.  ஆய்வு மதிப்பீட்டின்படி, 85 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதமடைந்த பகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்றார்.

 

More articles

Latest article