சென்னை: 3வார மூடலுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், தொற்று குறையத்தொடங்கிய தால், குறிப்பிட்ட சில மாவட்டங்களைத் தவிரத்து மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,இதர 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க ஆரம்பித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நேற்று (15ந்தேதி) திறக்கப்பட்டது. 3வார அடைப்புக்கு பிறகு நேற்று கடை திறக்கப்பட்டதால், அதிகாலை முதலே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளின் முன்பு குவியத்தொடங்கினர்.

35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை ஆகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ரூ.42.96 கோடி, மதுரையில் ரூ.49.54 கோடி,திருச்சியில் ரூ.33.65 கோடி,என மொத்தம் ரூ.165 (ரூ.164.87) கோடி அளவுக்கு மது விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.