மிதாப் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பிங்க் படத்தின் ரீமேக் படத்திற்கு’நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அவருடன்  வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். நிரவ்ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு  வெளியிட்டுள்ளது.

இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்கி வருகிறார் எச்.வினோத். இதன் முக்கியக் காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன.

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பிங்க்’. இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் பாராட்டினர். ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அஜித் – வினோத் கூட்டணிக்காக கைப்பற்றினார் போனிகபூர்.