சென்னை: சென்னை ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளியில் மதமாற்றம் நடைபெறுவதாகவும், அதை தடுத்து, அங்குள்ள விடுதியில் உள்ள மாணவிகளை 24மணி நேரத்தில் மீட்கவும் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பிரபலமான பள்ளிகளில் ஒன்றான  சிஎஸ்ஐ மோகனன் பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் ஏழை மாணவிகளை கட்டாப்படுத்தி மதம் மாற்றம் செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், அவர்களை மீட்டு, அந்த பள்ளிமீது நடவடிக்கை எடுக்குமாறும் தமிழகஅரசுக்கு  தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்  வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததே தங்களால்தான் என கிறிஸ்தவ அமைப்புகள் தம்பட்டம் அடித்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதமாற்றம் புகாரில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட அவலமும் அரங்கேறியது. இந்த நிலையில், கிறிஸ்தவ பள்ளிகளில், மதமாற்றம் செய்வதாக குறித்த குற்றச்சாட்டிற்கு நடவடிக்கை எடுக்க கோரி தேசிய குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு நல ஆணையத்தின் தலைவர் பிரியங் கணுங்கா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  சென்னை இராயப்பேட்டையில் இயங்கி வரும் சிஎஸ்ஐ மோகனன் கிறிஸ்தவ பள்ளி, அங்குள்ள விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற வற்புறுத்துவதாக புகார் வந்துள்ளதாகவும், அதன்படி,  கடந்த 6ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்டோர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஏழ்மை காரணமாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம், மதமாறச் சொல்லி வற்புறுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மேலும், அந்த பள்ளியுடன் இணைக்கப்பட்ட மாணவிகள் விடுதி பதிவு பெறாமல் செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும், மேலும், மாணவிகளுக்கு பாதுகாப்பு இன்றி விடுதி நடைபெறுவதாகவும்  தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணைய தலைவர் ஆய்வுக்கு பிறகு,  அங்கு தங்கி படிக்கும் மாணவிகள் மேலும், துன்புறுத்தப்படுவதாக புகார் வந்துள்ளது. அதனால், விடுதி மாணவிகளை அடுத்த 24மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறி உள்ளது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை அருகே மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பின்னணியில் மதமாற்ற சர்ச்சைகள் எழுந்தன இருப்பினும் மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என தமிழகஅரசும், காவல்துறையும் கூறியது. இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ பள்ளி மாணவிகளை கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற வலியுறுத்துவதாக எழந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2021ல் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்16.2%, மூத்த குடிமக்கள் கொலை 11.3%, கடத்தல் வழக்குகள் 27.7% அதிகரிப்பு! தேசிய குற்ற ஆவணம் அதிர்ச்சி தகவல்…