சென்னை; தமிழகத்தில் 2021ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்  16.2% 2,மூத்த குடிமக்கள் கொலை 11.3 சதவீதம்  கடத்தல் வழக்குகள் 27.7%  அதிகரித்து உள்ளது என தேசிய குற்ற ஆவணம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அதிகம் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.

நாட்டில் 2021ம் ஆண்டில் மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்கள் கொலை 11.3% அதிகரித்து உள்ளது என்று தெரிவித்துள்ளதுடன்,  குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் 16.2% அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் 2021ல் 1,686 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை செய்யப்பட்டவர்களில் 11.3 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் ஆவர். கடந்த  2019ம் ஆண்டு 1,745 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 1,572 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 173 பேர் மூத்த குடிமக்கள்.

கடந்த 2020ம் ஆண்டில்,  1,661 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,484 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 177 பேர் மூத்த குடிமக்கள் ஆவர். ஆனால், கடந்த ஆண்டில் (2021)  1,686 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,495 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 191 பேர் மூத்த குடிமக்கள் . மூத்த குடிமக்கள் தொடர்புடைய 191 கொலை வழக்குகளில் கொலை செய்யப்பட்டவர்களில் 202 பேர் 60 வயதுக்கும் அதிகமானோர்.

கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்,  கொலை வழக்குகள் பதிவாவது குறைந்துள்ள நிலையில்,  மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் கோடிட்டு காட்டியுள்ளது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் 2,142 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 181 மூத்த குடிமக்கள் கொலை செய்யப்பட்டனர். முதலிடத்தில் உத்தரப் பிரதேசமும் (3,717 வழக்குகள்), பிகார் (2,799), மகாராஷ்டிரா (2,330), மத்தியப் பிரதேசம் (2,034), மேற்கு வங்கம் (1,884), ராஜஸ்தான் (1,786), தமிழ்நாடு (1,686) இடங்களில் உள்ளன.

மூத்த குடிமக்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகத்தில் 13.6 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் ஆவர். கேரளாவில் 16.5 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட தகவல்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

அதுபோல, தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்றும், 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டில்  16.2% அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம்  அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக மொத்தம் ஒரு லட்சத்து 49ஆயிரத்து 404வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2020-ம் ஆண்டை விட 16 புள்ளி 2 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 531 வழக்குகள் பதிவாகி உள்ளன.

2021-ம் ஆண்டில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், சுமார் 38சதவீதம் வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை என்று தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டில் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 3ஆயிரத்து 459 பேர் ஆவர்.

வயது வாரியாக பார்க்கும் போது 6வயதுக்குட்பட்ட 52 குழந்தைகள் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50பெண் குழந்தைகள், 2ஆண் குழந்தைகள் அடங்கும். 6வயதில் இருந்து 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 226 சிறுமிகளும், 16 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  12 வயதில் இருந்து 16 வயதுக்கு உட்பட்டவர்களில், ஆயிரத்து 389சிறுமிகளும், 11 சிறுவர்களும் உள்ளனர். 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களில் ஆயிரத்து 770 சிறுமிகளும், 5 சிறுவர்களும் உள்ளனர்.

மொத்தம் பதிவான 3ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளில் 99.5சதவீதம் குற்றங்கள், குழந்தைகளுக்கு தெரிந்தவர்களாலேயே இழைக்கப் பட்டுள்ள அவலம் அரங்கேறி உள்ளது.  292 குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். 956 பேர் குடும்ப நண்பர்கள், அண்டை வீட்டார் என தெரிந்தவர்களாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்கள் நண்பர்கள், இணையவழி நண்பர்கள் உள்ளிட்டோரால் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகியுள்ளனர். 

2021 ஆம் ஆண்டில் சிறார்களுக்கு எதிராக மொத்தம் 31,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ம் ஆண்டை விட 4.7% (29,768 வழக்குகள்) அதிகம் ஆகும். மொத்தமுள்ள 31,170 வழக்குகளில் 37,444 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் 16 வயது முதல் 18 வயது வரை (76.2%) (37,444 பேரில் 28,539 பேர்) உள்ளவர்கள் ஆவர்.

2021-ம் ஆண்டு மொத்தம் 2,189 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ம் ஆண்டை விட 27.7% அதிகம் ஆகும். மொத்தம் 6,533 பேர் கடத்தப்பட்ட நிலையில், அவர்களில் அவர்களில் 2,877 குழந்தைகள் ஆவர். இந்த வழக்குகள் தொடர்பாக 5,755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் கொலை குற்றங்கள், பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது என்பதையே சுட்டிக்காட்டி உள்ளது.

தற்கொலை, சாலைவிபத்து, சிறுவர்களின் குற்றச்செயல்களில் தமிழகம் 2வது இடம்! தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தகவல்..

சென்னையில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது! சங்கர் ஜிவால்