சென்னை: தமிழகத்தில் அக்டோபர்  மாததம் முதல் மின் கட்டணம் உயர்வு அமலாசுகும் என்றும், 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படு உள்ளது என்றும்  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டண உயர்வுக்கு மின்சார  ஒழுங்குமுறை ஆணையத் தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. அது கிடைத்தவுடன், திருத்தப்பட்ட புதிய மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளார் என்றார்.

மின்வாரிய அதிகாரிகள் மீது புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், அதிகாரிகள் தவறு செய்யாமல் கண்காணிக்க மின் வாரியத்தில் உள்ள 12 மண்டலங்களுக்கும் தலா 3 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த குழுவில் மொத்தம் 36 பேர் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் மின்வாகனங்கள் அதிகரித்துள்ளதால்,  மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள மின்சார அலுவலகங்களில் மின்சார வாகனங்களை ‘சார்ஜ்’ செய்வதற்காக ‘சார்ஜிங் பாயிண்ட்’ அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தவர்,  முதற்கட்டமாக 100 இடங்களில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட நவீன வசதியுடன் அதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதன் பயன்பாடு மற்றும் வரவேற்பை தொடர்ந்து மேலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது என்றவர்,  2-ம் கட்டமாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் 100 நாட்களில் வழங்கும் வகையிலான திட்டம் இந்த மாத இறுதிக்குள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட இருப்பதாகவும்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒரு லட்சத்து 45 மின் கம்பங்கள் தயாராக உள்ளன. தாழ்வாக செல்லும் மின்வட கம்பிகள் மாற்றப்பட்டு வருகின்றன. வலுவற்ற மின்கம்பங்கள் மாற்றப்பட்டு உள்ளன. 80 சதவீத பணிகள் தற்போது முடிவுற்றுள்ள நிலையில், பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழையை எதிர்கொள்ள அவை தயார்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…