மும்பை:

ந்திய தொலைத்தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்த ரிலையன்ஸ், கடந்த மூன்று ஆண்டுகளில், வோடபோன், ஐடியா நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்து உள்ளது. அதே வேளையில் நடப்பு காலாண்டில் ரூ.840 கோடி லாபம் ஈட்டி உள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாரதி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தனது முதல் காலடியை எடுத்து வைத்தது.

அதைத்தொடர்ந்து, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., மொபைல் டேட்டா இலவசம் என்ற அதிரடி அறிவிப்போடு பரபரப்பாக களமிறங்கியது. வந்த வேகத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர் களையும்  தன் வசப்படுத்தியது.

ஜியோவின் கவர்ச்சிகரமான சலுகைகளால் பொதுமக்கள் ஈர்க்கப்ப்டட நிலையில்,  ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் சந்தாதார்கள் ஜியோவுக்கு அதிரடியாக தாவினர். தாவினர்.

இதன் காரணமாக இந்திய தொலைத்தொடர்பு சந்தையில், கடைசியாக வந்த ஜியோ 3வது இடத்தை கைப்பற்றியது.

இந்த நிலையில், தற்போது ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளதாக டிராய் அறிவித்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜியோவின் ஒட்டுமொத்த சந்தாதார் எண்ணிக்கை 33.13 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக,  32.29 கோடி சந்தாதார்களைக் கொண்ட வோடஃபோன் – ஐடியா நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளது. கடந்த மே மாத நிலவரப்படி,  ஏர்டெல் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறிய நிலையில், தற்போது, முதலிடத்தை பிடித்து உள்ளது.

ஏர்டெல் நிறுவன சந்தாதார்களின் எண்ணிக்கை 32 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 27.80 சதவிகிதமாகவும், ஏர்டெலின் சந்தைப் பங்கு 27.6 சதவிகிதமாகவும் இருப்பதாகத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.

2019 ஜனவரி – மார்ச் காலாண்டில் ஜியோவின் நிகர லாபம் ரூ.840 கோடியாகவும், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் நிகர லாபம் ரூ.891 கோடியாகவும் இருந்தது. ஜியோ சேவை தொடங்கப்பட்டபோது ஆரம்பக்கட்டமாக ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.