மும்பை:

நாடு முழுவதும் அதிகப்படியான சந்தாதாரர்களை கொண்டுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின்  வருடாந்திர மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பல புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சலுகைகள் இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை இன்று காலை 11:00 மணி அளவில்  மும்பையில் நடத்துகிறது.. இந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மேலும் வணிக ரீதியான ஜியோ ஜிகாஃபைபர் வெளியீடு மற்றும் ஜியோபோன் 3 சாதனத்தின் அறிமுகம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக

1. ப்ராட்பேண்ட்- லேண்ட்லைன் – டிவி ஆகிய மூன்று இணைப்புகளும் இணைந்த ஒரே கிகாஃபைபர் சேவையை 500- 600 ரூபாய்க்குள்ளான விலையில் அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வர உள்ளதாக கூறப்படுகிறது.

2.ஜியோ ஃபோன் 3-ன் விலை 4,500 ரூபாய் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

3.ஜியோ 340 மில்லியன் (34 கோடி) சந்தாதார்கள் என்ற சாதனையை பெற்றுள்ளது  முகேஷ் அம்பானி 4.ஜியோ போன் வரிசையில்,  அடுத்த மேம்படுத்தப்பட்ட ஜெனெரேஷன் மாடலான புதிய ஜியோபோன் 3 சாதனத்தை வெளியிடக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபோன் 3 மாடல் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று ஜியோ நிறுவனம் ஏற்கனவே  தெரிவித்திருந்ததுங  ஆனால் அண்மையில் வெளியான தகவலின்படி ஜியோபோன் 3 பியூச்சர் போன் மாடலாக தான் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ போன் 3 ஆனது 4ஜி ஆதரவு கொண்ட மீடியா டெக் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ஜியோ நிறுவனம் தனது ஜியோ போன்களுக்காக க்வால்காம் மற்றும் யுனிசாக் சிப்செட்களைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 4ஜி பீயூச்சர் போன் சார்ந்த பணிக்காக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் KaiOS-ன் கூட்டணியை MediaTek உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், மீடியாடெக் கொண்டு இயங்கும் அந்த ரிலையன்ஸ் ஜியோ போன் ஆனது அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வணிக ரீதியாக கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நடத்தும் இந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தின் முழு நிகழ்ச்சியையும் இம்முறை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களில் நேரலை காணும் வகையல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு போலவே இம்முறையும் முகேஷ் அம்பானியின் Jio பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் நேரலை காணலாம்.