மும்பை

ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் பங்குகளை சௌதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக் குழுக் கூட்டம் தற்போது மும்பையில் நடந்து வருகிறது.   சென்ற வருடம் இதே கூட்டத்தில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் 2 ஐ அறிமுகம் செய்ஹ்டர்.   இந்த முறை ஜியோ போன் 3 ரூ.4500 விலையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த கூட்டத்தில், ”இந்நிறுவனத்துக்கு ஜாம்நகரில் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.  இதில் சுத்திகரிக்கப்படும் 33 மில்லியன் டன்கச்சா எண்ணெய் உள்நாட்டு பயன்பாட்டுக்கும் 38.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.    உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிபு ஆலைகளாக இவை உள்ளன.

சௌதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான சௌதி அராம்கோ ரிலையன்ஸ் நிறுவனத்தின் 20% பங்குகளை வாங்க உள்ளது.  இந்த பங்குகளின் மதிப்பு 7,500 கோடி டாலர்களாகும்,  இது இந்தியாவுக்கு வந்துள்ள மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு ஆகும்.” என நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி ஜியோ இணையச் சேவை உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார்.