டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று காலை 10 மணி அளவில் வெளியாகிறது. என்டிஏ இணையதளத்தில் ஹால்டிகெட் டவுன் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவபடிப்பில் சேர நீட் எனப்படும் மருத்துவ நுழைவு தேர்வு தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி இந்த ஆண்டு மே 3, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதியம் 2:00 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள இந்தத் தேர்வு, ஆஃப்லைன் (பேனா மற்றும் காகிதம்) முறையில் நடைபெற உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு NTA இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. neet.nta.nic.in இணையதளத்தில் காலை 10மணிக்கு வெளியிடப்படுகிறது. நுழைவுச் சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த நுழைவுச்சீட்டில் தேர்வர்களின் பெயர், மையத்தின் முழு முகவரி போன்ற விவரங்கள் இடம்பெறும்.
நீட் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதுவதில் மாணவ-மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இந்தாண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் இத்தேர்வினை 28 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் இத்தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்(அனுமதி சீட்டு) நேற்று வெளியிடப்படுவதாக இருந்தது. பின்னர் நள்ளிரவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவித்தது.
[youtube-feed feed=1]