சென்னை: பொறியியல் (பி.இ.) கலந்தாய்வில் புதிய நடைமுறையை  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் ரூ.5,000 பதிவுக் கட்டணம் செலுத்தாமல் நேரடியாக கல்லூரிக்கு சென்று அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அவா்களுக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, தமிழகஅரசின் தொழில்நுட்பத் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் ஏற்படும் காலியிடங்களைத் தவிா்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைகழகத்தில்  அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வா்கள், தமிழகத்தில் உள்ள 110 பொறியியல் சோ்க்கை சேவை மைய பணியாளா்களுக்கான  பயிற்சிகள் வழங்கப்பட்டது. அப்போது,   வழக்கமான பயிற்சிகளுடன் கலந்தாய்வுக்கான புதிய நடைமுறைகள் குறித்த பயிற்சிகளும் வழங்கப் பட்டன. நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலியிடங்களைத் தவிா்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு மாணவா் கல்லூரியை தோ்வு செய்துவிட்டு 7 நாள்களில் அவா் கல்லூரியில் சோ்ந்துவிட்டாரா என கண்காணிக்கவும், அவா் கல்லூரியில் சேரவில்லை என்றால் மீண்டும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் அந்த காலியிடம் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் ரூ.5,000 பதிவுக் கட்டணம் செலுத்தாமல் நேரடியாக கல்லூரிக்கு சென்று அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அவா்களுக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]