சேலம்,
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் திமுக செயல்தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
சேலத்தில் திமுக நிர்வாகி இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது, தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில் தமிழக அரசு பெரும்பான் மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னருக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர் பந்து தன் கையில் இல்லை என்று கூறுகிறார். ஆனால், திமுகவின் 89 எம்எல்ஏக்களும் சேர்ந்து சென்றால் ஆளுநர் என்ன செய்வார் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜனநாயக முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவே விருப்பம் திமுக விரும்புவதாகவும்,
தற்போதைய நிலையில் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.