வாரணாசி:

விவசாயிகளை வஞ்சித்து வரும் பிரதமர் மோடிக்கு வாரணாசியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள 25 விவசாயிகளில் 24 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, தலைமை தேர்தல் ஆணையத்தில் தமிழக மற்றும் தெலங்கானா விவசாயிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

வாரணாசியில் போட்டியிடும்  பிரதமர் மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த தமிழக மற்றும் தெலங்கானா விவசாயிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.  25 விவசாயிகள் மனுதாக்கல் செய்த நிலையில்,  விவசாயி ஸ்டாரி நரசய்யா என்ற ஒரே ஒரு விவசாயியின்  மனு மட்டுமே ஏற்கப்பட்டு, மற்ற 24 பேரின் மனுக்கள்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழக மற்றும் தெலுங்கானா விவசாயிகள் அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், தங்களது வேட்புமனுக்கள் தேவையின்றி நிராகரிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக மொத்தம் 30 பேர் போட்டியிடுகின்றனர்.